
1957 முதல் 1990-கள் வரையிலான கோவை, உடுமலை வட்டார மில் தொழிலாளர்களின் வாழ்க்கையே இத்திரைப்படம். பஞ்சாலைகளை பின்னணியாக வைத்து ஓர் அழகான காதல் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கேண்டீன் நேர சுவாரசிய பேச்சுகள், அனல் பறக்கும் கேட் கூட்டம், குடும்பங்களாக செல்லும் சுற்றுலா, தொழிற்சாலைக் குடியிருப்புகளில் உருவாகும் நட்பு என்று மற்றவர்களுக்கு வாய்க்காத சுவாரசியமான உலகங்களைக் கொண்டது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை. இன்றைய சாஃப்ட்வேர் இளைஞர்கள், யுவதிகளின் வாழ்க்கைமுறை எப்படி மற்றவர்களால் ஆர்வத்தோடு பார்க்கப்படுகிறதோ, அப்படி 1970களிலும் 80களிலும் இருந்தது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் சந்தோஷங்களையும் வலிகளையும் பதிவு செய்யும் படமே ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’.
|
||||
| Download Ringtones & Subcribe to Caller Tones | ||||
Intern Login
Website Developed and Maintained by Minveli Infotech Pvt. Ltd. |
||||